இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற அரங்கில் அமைக்கப்படிருந்த சர்வதேச பத்திரிகையாளர் மையத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
இலங்கையில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டின் போது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் வகையில் அங்கு சர்வதேச பத்திரிகையாளர் மையம் அமைக்கப்படிருந்தது.
பண்டாரநாயகே சர்வதேச நினைவு அரங்கில் தற்காலிகமாக அமைக்கப்படிருந்த அந்த மையத்தில் சுமார் 1000 பத்திரிகையாளர்கள் குழுமி செய்திகளை சேகரித்துச் சென்றனர். மாநாடு முடிந்த பிறகு கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு இன்று காலையில் திடீரென தீ பிடித்தது. தீயில் தொழில்நுட்ப உபகரணங்கள் பல முற்றிலும் எரிந்து நாசமாகின. மின் கசிவே தீ பிடிக்க காரணம் என கூறப்படுகிறது.