உலகம்

அமெரிக்காவில் இந்திய நடிகர் கால் பென்னுக்கு பதவி

செய்திப்பிரிவு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நடிகர் கால் பென்னை அரசின் உயர் பதவியில் நியமிக்க அதிபர் ஒபாமா பரிந்துரைத்துள்ளார்.

கால் பென் ஏற்கெனவே வெள்ளை மாளிகையில் அதிகாரியாக பணியாற்றியவர். இப்போது அமெரிக்க அதிபரின் கலை மற்றும் பண்பியல் துறை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதிபர் பதவிக்கு ஒபாமா போட்டியிட்ட போது தேர்தல் பிரசாரத்தில் கால் பென் முக்கியப் பங்கு வகித்தார்.

SCROLL FOR NEXT