உலகம்

ஆப்கானிஸ்தானில் தொடர் தாக்குதல்களில் 36 பேர் பலி; 103 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

காபூலில் நேற்று முன்தினம் ராணுவ அலுவலகம் அருகே இரட்டை குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட் டன. இதில் ராணுவ ஜெனரல் உட்பட 35 பேர் பலியாகினர்.

இதைத் தொடர்ந்து நேற்று அதி காலை காபூலில் உள்ள தன்னார்வ தொண்டு அமைப்பை குறிவைத்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். நுழைவுவாயிலில் ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி வெடித்துச் சிதறினான். இதைத் தொடர்ந்து தொண்டு நிறுவன அலுவலகத்துக்குள் புகுந்த 3 தீவிர வாதிகள் வெளிநாட்டினர் உட்பட 42 பேரை பிணைக்கைதியாக பிடித் தனர். அந்த வளாகத்தைப் பாதுகாப் புப் படையினர் சுற்றிவளைத்தனர்.

இருதரப்புக்கும் இடையே சுமார் 11 மணி நேரம் சண்டை நீடித்தது. இறுதியில் 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் சிக்கியிருந்த 10 வெளிநாட்டினர் உட்பட 42 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். பாதுகாப்புப் படையினர் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒட்டுமொத்தமாக 36 பேர் உயி ரிழந்துள்ளனர். 103-க்கும் மேற்பட் டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT