உலகம்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ரூ.2.65 கோடி சம்பளம் தானம்

செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஓராண்டு சம்பளம் ரூ.2.65 கோடி அறப்பணி அமைப்புக்கு தானமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர்களில் அதிபர் ட்ரம்பும் ஒருவர். தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒரு டாலரை மட்டுமே சம்பளமாக பெறுவேன், மீதமுள்ள தொகையை தானமாக அளித்துவிடுவேன் என்று ட்ரம்ப் கூறினார்.

இதுதொடர்பாக அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர், வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியபோது, அதிபர் ட்ரம்பின் ஆண்டு வருமானம் ரூ.2.65 கோடி டிசம்பர் மாதத்தில் தானமாக வழங்கப்படும். அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அவர் பூர்த்தி செய்வார் என்று தெரிவித்தார்.

முன்னாள் அதிபர்கள் ஹெர்பர்ட் ஹுவர், ஜான் எப்.கென்னடி ஆகியோரும் தங்களது சம்பளத்தை தானமாக அளித்தவர்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT