ஐ.நா.அமைப்பின் கீழ் ‘காடு வாழ் வலசை உயிரினப் பாது காப்பு அமைப்பு' உள்ளது. இது வலசைப் பறவைகள், மீன் வகை கள் மற்றும் பாலூட்டி உயிரினங்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்காக இயங்கி வருகிறது.
இந்த அமைப்பு கடந்த ஒரு வாரமாக 120 நாடுகளைச் சேர்ந்த சுமார் 900 நிபுணர்களை ஆலோ சித்து 31 வகையான உயிரினங் களைப் பாதுகாப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இவற்றில் மீன் வகைகள் மட்டும் 21.
அந்த அமைப்பின் நிர்வாகச் செயலர் பிராட்னி ஷாம்பர்ஸ் கூறும்போது, "கடலில் ஏற்படும் பிளாஸ்டிக் மாசு, வேட்டை காரண மாக வலசை உயிரினங்கள் அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலைச் சமநிலையில் வைத்திருக்க இவற்றைப் பாது காப்பது மிகவும் முக்கியம்" என்றார்.
ஈகுவேடார் நாட்டில் நடந்த இந்தச் சந்திப்பு, இந்த அமைப்பின் கடந்த 35 ஆண்டுகால வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று என கூறப்படுகிறது. இந்த அமைப் பின் அடுத்த சந்திப்பு 2017ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது.