உலகம்

இந்திய வம்சாவளி அரசியல்வாதிக்கு சிறந்த எம்.பி. விருது: பிரிட்டன் அரசு வழங்கியது

பிடிஐ

இந்திய வம்சாவளி எம்.பி.யான கெய்த் வாஸுக்கு பிரிட்டனில் 2014-ம் ஆண்டின் சிறந்த லேபர் எம்.பி. விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளுக்கு அவர் செய்த சேவைகளுக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கெய்த் வாஸ் கூறும்போது, “இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எனது கிழக்கு லீசெஸ்டர் தொகுதியில் தனிநபர்கள், குழுக் கள், பல்வேறு மதங்கள், இனங் களைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளேன். பன்முக கலாச்சாரம் கொண்ட சமூகத்தில் அனைவரின் பிரதி நிதித்துவமும் நாடாளுமன்றத் தில் ஒலிக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்” என்றார்.

பேரவைத் தலைவர் ஜான் பெர்கவ், கெய்த் வாஸ் சிறந்த எம்.பி. விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளதை அறிவித்தார். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கெய்த் வாஸுக்கு அக்கட்சியின் தலைவர் எட்வர்டு மிலிபாண்ட் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT