உலகம்

பிலிப்பின்ஸ் பூகம்பத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 172 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

பிலிப்பின்ஸ் பூகம்பத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள், பாலங்கள் இடிந்து விழுந்தன. சாலைகளில் வெடிப்பு ஏற்பட்டது. போஹோல் தீவின் கார்மென் நகரில் 33 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகுகளாகப் பதிவானது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 172 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT