இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைக்க வேண்டும். மேலும் மத்திய நிர்வாக முறையை யும் அமல்படுத்த வேண்டும் என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் வலியுறுத்தி யுள்ளார்.
இது குறித்து யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் அவர் கூறியதாவது:
இலங்கை தமிழர்களின் பிரச் சினையை பிரிவினைவாதிகளின் பார்வையில் இருந்து அரசு அணுக கூடாது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். மேலும் மத்திய நிர்வாக முறையையும் அமல்படுத்த வேண்டும். அப்போது தான் இலங்கை தமிழர்கள் அமைதி யான முறையில் வாழ்வதற்கு வழி ஏற்படும்.
அண்மையில் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு தூதர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் இந்த கருத்தை தெரிவித்தேன். இலங்கை அரசின் தூதர்களும் அப்போது இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.