இந்தியா, பாகிஸ்தான் இடை யேயான நேரடிப் பேச்சுவார்த்தை எப்போதும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ-மூன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பான் கீ-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக் கூறிய தாவது:
பான் கீ-மூன் தனது பதவிக் காலம் முழுவதும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதை ஆதரிப்பார்” எனத் தெரிவித்துள் ளார்.
நடப்பாண்டு, பான் கீ-மூனின் பதவிக்காலம் நிறை வடையவுள்ளது. இருநாடு களுக்கு இடையேயான பிரச்சி னையைத் தீர்ப்பதில் அவர் ஆர்வம் காட்டி வந்தார். எனினும், இரு நாடுகளும் தாங்களாகவே பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டை யும் அவர் பேணி வந்தார்.-பிடிஐ