உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வலிமையான பிரான்ஸ் அவசியம்: இம்மானுவேல் மெக்ரோன்

ஐஏஎன்எஸ்

ஐரோப்பிய ஒன்றியதுக்கும், உலக நாடுகளுக்கும் முன்பு இருந்ததைவிட வலிமையான பிரான்ஸ் தேவைப்படுகிறது. புதிய வலிமையான பிரான்ஸ் சுதந்திரம் மற்றும் ஒற்றுமையை உரக்க பேச வேண்டும் என்று பிரான்ஸ் அதிபராக பதவியேற்ற இம்மானுவேல் மெக்ரோன் கூறியுள்ளார்.

பிரான்ஸின் எலிசே மாளிகையில் அந்நாட்டின் 25-வது அதிபராக ஞாயிற்றுக்கிழமை இம்மானுவேல் மெக்ரோன் (39) பதவி ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அளிக்கபட்ட ராணுவ மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

பதவியேற்பு விழாவில் பேசிய மெக்ரோன், "உலகளவில் பிரான்ஸின் பெருமையை மீட்டெடுப்பேன். ஐரோப்பிய ஒன்றியதுக்கும், உலக நாடுகளுக்கும் முன்பு இருந்ததைவிட வலிமையான பிரான்ஸ் தேவைப்படுகிறது. அந்த புதிய பிரான்ஸ் சுதந்திரம் மற்றும் ஒற்றுமையை உரக்க பேச வேண்டும்.

எனது ஆட்சிக்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சீர்திருத்தம் செய்யப்படும். நம்மிடையே காணப்படும் பிளவுகள் விரைவில் சரி செய்யப்படும். நாம் நமது தேசம் மறுமலர்ச்சியை எதிர்கொள்ளும் விளிம்பில் இருக்கிறோம்" என்றார்.

அதிபராக பதவியேற்ற பிறகு முதல் சர்வதேச பயணமாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சல்லா மெக்கல்லை மெக்ரோன் சந்திக்க இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹொலாந்தே பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. ஸ்திரத்தன்மை, ஐரோப்பிய ஆதரவுநிலை, தொழில்நுட்ப அடிப்படையிலான அரசு நிர்வாகம் போன்ற வாக்குறுதிகள் மூலம் பெருமளவிலான வாக்காளர்களை கவர்ந்த இம்மானுவேல் மெக்ரோன் மே 7-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 65.5% சதவித ஓட்டுகள் பெற்று பிரான்ஸ் அதிபராக தேந்தெடுக்கப்பட்டார்.

மெக்ரோனை எதிர்த்து போட்டியிட்ட மெரைன் லி பென்னுக்கு 34.5% வாக்குகள் கிடைத்தன.

SCROLL FOR NEXT