உலகம்

தென்கொரிய கப்பல் விபத்து: 29 உடல்கள் மீட்பு; கப்பல் கேப்டன் கைது

செய்திப்பிரிவு

தென்கொரிய கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய கப்பலிலிருந்து 300க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேறுவதற்கு முன்னதாகவே அதன் கேப்டன் கப்பலிலிருந்து தப்பியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதன் கேப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சியோல் அருகே உள்ள இன்சியோன் துறைமுகத்திலிருந்து சீவொல் கப்பல் செவ்வாய்க்கிழமை புறப்பட்ட போது திடீரென கப்பல் மூழ்க ஆரமிப்பத்தது. உதவி கோரி இந்தப் கப்பலில் இருந்து சிக்னல் அனுப்பப்பட்டது. உடனே, 100 கடலோர காவலர்களும், கடற்படை கப்பல்களும், மீன்பிடி கப்பல்களும், 18 ஹெலிகாப்டர்களும் விரைந்து வந்து 15 பள்ளி மாணவர்கள் உள்பட 179 பேரை உயிருடன் மீட்டனர்.

மேலும் கடலுக்குள் மூழ்கிய 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் உள்ளிட்ட 475 பயணிகளை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இதுவரை 29 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் கடலில் மூழ்கிய 270க்கும் அதிகமான பயணிகளை மீட்கும் பணி நடைபெறுகிறது.

கப்பல் கேப்டன் கைது

கப்பல் மூழ்கியது குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் கப்பல் நிர்வாகம் உரிய தகவல்களை அளிக்கவில்லை என்று கூறப்பட்டது இந்த நிலையில் கப்பல் மூழ்க போவதாக இருந்த நிலையில், அந்த கப்பலில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் விபத்திற்கு காரணமான கப்பலின் கேப்டனை கைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினர்.

இந்நிலையில், கப்பல் நிர்வாகம் விபத்திற்கான ஆதாரங்களை அழித்திருக்கலாம் என்பதை மேற்கோள் காட்டியுள்ள தென் கொரியாவின் மோக்போ உள்ளூர் நீதிமன்றம், விபத்திற்குள்ளான கப்பலின் கேப்டன் லீ ஜூன் சியோக் மற்றும் அவரது பணிக்குழுவில் இருந்த 2 உதவி கேப்டன்களையும் கைது செய்ய வாரண்ட்களை பிறப்பித்தது.

இதையடுத்து, கேப்டன் லீ கைது செய்யப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர் மீது பணியில் அலட்சியமாக இருத்தல், கடல்சார் சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தென் கொரியாவின் யான்ஹேப் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கப்பல் விபத்திற்குள்ளானதற்கு முன்பாகவே கேப்டன் லீ தனது பொறுப்பை மூன்றாவது உயர் அதிகாரியின் கையில் ஒப்படைத்து விட்டதாக அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளார்.

கப்பல் மூழ்கக்கூடும் என்ற தெரிந்த நிலையில், கப்பலிலிருந்து கேப்டன் பயணிகளுக்கு முன்னதாகவே தப்பியதாக மற்றொரு கப்பல் ஊழியர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

மீட்பு பணியில் சிரமம்

கடல் சீற்றம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால் ஏற்பட்டுள்ள இருள் சூழல் காரணங்களால் பயணிகளை மீட்கும் பணி தாமதமனது. மேலும் மூழ்கிய கப்பலை மீட்க ராட்சத கிரேண்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. கப்பலின் உள்ளே எஞ்சிய பயணிகள் சிக்கி இருக்க வாய்ப்பு இருப்பதால், முதலில் அவர்களை மீட்க 40 அழ் கடல் நீச்சல் வீரர்கள் கப்பலின் உட்பகுதிக்கு சென்றுள்ளனர். இந்த கப்பல் 480 அடி நீளமும், 6,586 டன் எடையும் கொண்டது என்பதால் இதன் உள்ளே சிக்கி இருக்கும் பயணிகள் உயிரோடு இருக்கக்கூடிய வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

விரத்தியில் முதல்வர் தூக்கிட்டு தற்கொலை

இந்த கப்பலில் சுற்றுலா சென்ற டான்வொன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 352 குழந்தைகள் சென்றனர். இதுவரை மீட்கப்படாதோரின் பட்டியலில் 268 மாணவர்களும் அடங்குவர். மாணவர்களின் உறவினர்கள் கப்பல் மூழ்கிய பகுதியிலேயே தங்கி இருந்தனர். இந்த நிலையில் சடலங்களை மீட்டு செல்வதற்காக மாணவர்களின் உறவினர்கள் பலர் தங்கியிருந்த இடத்தில், டான்வான் பள்ளியின் துணை முதல்வர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

SCROLL FOR NEXT