உலகம்

பிரம்மோஸ் விற்பனை விவகாரம்: வியட்நாமுடன் பேச்சுவார்த்தையை முடிக்க இந்தியா திட்டம்

செய்திப்பிரிவு

வியட்நாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், பிரம்மோஸ் ஏவுகணைகளை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது குறித்த பேச்சுவார்த்தைக்கு இறுதிவடிவம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணை களை உருவாக்கின. 290 கிமீ தொலைவு வரையிலான இலக்கை தாக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணைகளை பெறுவதற்கு வியட்நாம் ஆர்வம் காட்டிவருகிறது.

ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணைகளை அதிக விலை காரணமாக ரஷ்யா தனது படைப்பிரிவில் சேர்க்கவில்லை. சீனாவை எதிர்க்க, நட்பு நாடான வியட்நாமுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில், பிரம்மோஸ் ஏவுகணைகளை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது இந்தியா வுக்கும் ஏற்புடையதாகவே உள்ளது.

ரஷ்யாவும் எதிர்ப்பு தெரிவிக் காத நிலையில், இந்தாண்டு இறுதிக் குள் இதற்கான ஒப்பந்தம் கையெ ழுத்தாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று வியட்நாமுக்கு செல்கிறார்.

இப்பயணத்தின் போது, பிரம்மோஸ் ஏற்றுமதி தொடர் பான பேச்சுவார்த்தை முக்கிய இடம் பிடிக்கும் என, ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறப்படு கிறது. சீனாவை கருத்தில் கொண்டு, வியட்நாம் உடனான ராணுவ ஒத்துழைப்பை இந்தியா தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு வருகிறது.

SCROLL FOR NEXT