உலகம்

பாகிஸ்தான் பூகம்பம்: பலி 45 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாகிஸ்தான் நேரப்படி மாலை 4.29 மணிக்கு, பலூச்சிஸ்தான் அருகே ஆவாரன் பகுதியில் 23 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்தப் பயங்கர நிலநடுக்கத்தால், ஆவாரன் பகுதியில் உள்ள வீடுகளும் கட்டடங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.

இந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 45 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறும் பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி, உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் இன்னும் மோசமாக இருக்கலாம் என அஞ்சப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆவாரன் மாவட்டத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் ராணுவம் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இது மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் என்றும், இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது பாகிஸ்தான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கராச்சி, ஹைதராபாத், லர்கானா உள்ளி உள்ளிட்ட பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு, மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு பீதியுடன் வெளியேறினர்.

பாகிஸ்தானில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட, ராணுவத்துக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கமாக, டெல்லி உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

SCROLL FOR NEXT