உலகம்

ஏமனில் காலராவுக்கு 115 பேர் பலி; 8,500 பேர் பாதிப்பு: சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகள் அவதி

பிடிஐ

ஏமனில் காலரா நோய் பரவி வருவதையடுத்து சுமார் 115 பேர் இதற்கு பரிதாபகமாக பலியாகியுள்ளனர். மேலும் 8,500 பேர் காலரா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர்,

உள்ளே வரும் நோயாளிகளை கவனிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 27-ம் தேதி முதல் இன்று வரை 115 பேர் காலராவுக்கு பலியாகியுள்ளனர்.

ஏமனில் ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக காலரா நோய் பரவியுள்ளது. ஏமனில் சவுதி ஆதரவு அரசுக்கும் இரான் ஆதரவு ஹுதி போராளிகளுக்குமிடையே கடும் சண்டை நடைபெற்று வருவதால் மருத்துவமனைகள் முழுதும் இயங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் காலரா நோயாளிகள் வரத்து நெரிசலாகியுள்ளது. ஒரே படுக்கையில் 4 காலரா நோயாளிகளை வைத்துப் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தெற்கு சூடான், நைஜீரியா, சிரியா, நைஜீரியா ஆகிய நாடுகளுடன் மனிதார்த்த நெருக்கடி மிகுந்த பட்டியலில் உலகச் சுகாதார அமைப்பு ஏமனையும் சேர்த்துள்ளது.

SCROLL FOR NEXT