பதவிக் காலம் முடிந்தபின்பு 40 ஏழைக் குழந்தைகளை தத்தெ டுத்து வளர்க்கப் போவதாக உரு குவே அதிபர் ஜோஸ் முஜிகா தெரிவித்துள்ளார்.
லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே அதிபர் ஜோஸ் முஜிகா வின் பதவிக் காலம் வரும் 2014-ம் ஆண்டு நிறைவடைகிறது. 78 வயதாகும் முஜிகா, மிகவும் எளிமை யான மனிதர். ஆடம்பரமாக உடை அணிதல், பங்களாவில் வசிப்பது உள்ளிட்ட வற்றை விரும்பாதவர்.
அதிபருக்கான பங்களாவில் வாழ விரும்பாமல், இப்போதும் மான்ட்விடியோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள தனது பழைய பண்ணை வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். அங்கு அவ்வப்போது தோட்டப் பணி யிலும் அவர் ஈடுபடுகிறார்.
அவரது மனைவி லூசியா டோபோலான்ஸ்கி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். முஜிகா வுக்கு குழந்தைகள் கிடையாது.
ஏழ்மையான அதிபர்
சர்வதேச ஊடகங்கள், அவரை உலகின் மிகவும் ஏழ்மையான அதிபர் என வர்ணித்து வருகின்றன. தனது சம்பளத்தில் 90 சதவீதத்தை சமூக நலத் திட்டங்களுக்கு முஜிகா அளித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ‘எல் அப்சர்வடோர்’ நாளிதழ் வெளியிட்ட செய்தியில், பதவிக் காலத்துக்குப் பின் 40 ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாக ஜோஸ் முஜிகா விருந்து நிகழ்ச்சியொன்றில் கூறியதாகத் தெரிவித்துள்ளது.
முஜிகா இத்தனை சிறப்புகளை பெற்றிருந்தாலும், அவர் மீதும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படு கின்றன. கஞ்சாவை வீடுகளில் பயிரிடுவதையும் விற்பனை செய்வதையும் சட்டப்பூர்வ மாக்கும் மசோதா உருகுவே நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இது உலக நாடுகளிடையே ஜோஸ் முஜிகா மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.