உலகம்

எபோலா வைரஸ் பலி 5,689 ஆக உயர்வு

ஏஎஃப்பி

எபோலா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,689 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக கினி, லைபீரியா, சியரா லியோன் உள்ளிட்ட நாடுகளில் எபோலா பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்தப் பிராந்தியத்தில் சுமார் 15,351 பேருக்கு எபோலா தொற்று ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி உயிரிழப்பு 5,459 ஆக இருந்தது. ஒரு வாரத்துக்குள் மேலும் 230 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,689 ஆக உயர்ந்துள்ளது.

கினி, லைபீரியாவில் எபோலா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சியரோ லியோனில் மட்டும் வேகமாகப் பரவி வருகிறது. மேற்கு ஆப்பிரிக்காவை தவிர்த்து அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT