உலகம்

பதான்கோட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை: அமெரிக்கா எதிர்பார்ப்பு

பிடிஐ

பதான்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை இந்தியா, பாகிஸ்தானிடம் பகிர்ந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி கூறும்போது, "தெற்கு ஆசிய நாடுகளில் தீவிரவாதம் மிகப் பெரிய சவாலாக உள்ளது.

அங்கிருக்கும் அனைத்து நாடுகளையும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இணைய அமெரிக்கா அழைப்பு விடுத்திருக்கிறது.

பாகிஸ்தானும் இந்தத் தாக்குதலை பகிரங்கமாக கண்டித்துள்ளது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த தெளிவான நிலைப்பாட்டில் பாகிஸ்தானுடன் அமெரிக்கா இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT