உலகம்

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் ஒரே வாரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலி

செய்திப்பிரிவு

உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற வன்முறையில் 500-க்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் வடக்கே அலிப்போ நகரை கைப்பற்றும் முயற்சியில் கிளர்ச்சிப் படையினரும், தீவிரவாத அமைப்பினரும் இணைந்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பதிலுக்கு அரசுப் படைகளுடன் மற்றும் ரஷ்ய படைகளும் தாக்குதல் நடத்துகின்றன.

கடந்த ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு ரஷ்யாவின் வான் தாக்குதல் தீவிரமடைந்தது. இதில் பலியானோரின் எண்ணிக்கையை சிரிய மனித உரிமை கண்காணிப் புக் குழுவினர் துல்லியமாக வெளியிடவில்லை. எனினும், 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி யிருக்கக் கூடும் என்றும், அவர் களில் பெரும்பாலானோர் கிளர்ச்சி யாளர்கள் மற்றும் தீவிரவாதிகள் என, அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஹம்தனியா உள்ளிட்ட, அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில், பொது மக்கள் 130 பேர் இறந்துவிட்ட தாகவும், சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தலைவர் ரமி அப்துல் ரெஹ்மான் கூறினார்.

நேற்றைய நிலவரப்படி, அலிப்போ நகரை நோக்கிய சாலைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் கிளர்ச்சி யாளர்களும், தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர். அதோடு, கிழக்கு மாவட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொடரும் உள்நாட்டு போர்

இதனால், ரஷ்ய ஆதரவு உள்ள போதிலும், சிரிய அரசுப் படைகள் கடினமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என, ரமி குறிப்பிட்டார். சிரியாவில் தொடரும் உள்நாட்டுப் போரால், இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் பலியாகினர். மொத்த மக்கள்தொகையின் பாதி பேர், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

SCROLL FOR NEXT