உலகம்

தேர்தலில் வாக்களித்தவர்கள் விரல்களை துண்டித்து ஆப்கான் தீவிரவாதிகள் கொடூரம்

செய்திப்பிரிவு

ஆப்கான் அதிபர் தேர்தலில் வாக்களித்து, திரும்பிக் கொண்டிருந்த பொதுமக்கள் 11 பேரின் விரல்களை துண்டித்த தீவிரவாதிகள் இருவரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஆப்கானில் அதிபர் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்த தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்து கொண்டிருந்த, 11 பேரின் மையிட்ட ஆள்காட்டி விரல்களை தீவிரவாதிகள் வெட்டி வீசினர்.

மேலும், "உங்களுக்கு வாக்களித்ததற்காக விரல்கள் துண்டிக்கப்பட்டதாக வேட்பாளர்களிடம் தெரிவியுங்கள்" என பொதுமக்களிடம் கூறினர்.

வாக்காளர்கள் விரல்கள் துண்டிக்கப்பட்ட தகவல் தெரிந்தவுடன் ஆப்கான் பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளை இருவரை கண்டறிந்து அவர்களை சுட்டுக் கொன்றனர். இதில், மேலும் 3 தீவிரவாதிகள் காயமடைந்தனர்.

SCROLL FOR NEXT