உலகம்

விசா பெறாததால் மலேசிய எதிர்க்கட்சித் தலைவரை அனுமதிக்கவில்லை: ஜப்பான் தூதரகம்

செய்திப்பிரிவு

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் விசா வாங்காமல் வந்ததால்தான் அவரை திருப்பி அனுப்பினோம் என்று ஜப்பான் தூதரகம் விளக்கமளித்துள்ளது.

ஜப்பானில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமீபத்தில் அன்வர் இப்ராஹிம் அந்நாட்டுக்குச் சென்றார். ஆனால், நாரிடா விமான நிலைய குடியேற்றத்துறை அதிகாரிகள், அவரை ஜப் பானுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து அவர் மலேசியா திரும்பினார்.

1999-ம் ஆண்டு பாலியல் மற்றும் ஊழல் புகார் தொடர்பாக மலேசிய நீதிமன்றம் தனக்கு தண்டனை அளித்துள்ளது. இதை காரணம் காட்டி, ஜப்பான் தனக்கு தடை விதித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். சிலர் தனக்கு எதிராக மறைமுகமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் கோலாலம்பூரில் உள்ள ஜப்பான் தூதரக அதிகாரி டோமோகோ நகாய் கூறியதாவது: “ஜப்பானுக்குள் நுழைய மலேசியர்கள் விசா பெற வேண்டிய அவசியமில்லை என கடந்த ஆண்டு அறிவித்திருந்தோம்.

ஆனால், குற்றச்சாட்டுக்கு உள்ளாகி தண்டனை பெற்றவர்களுக்கு இந்த விதிமுறை தளர்வு பொருந்தாது. அவர்கள் கட்டாயம் விசா பெற வேண்டும். அந்த வகையில் அன்வர் இப்ராஹிம், விசா பெற்றிருந்தால்தான் அவரை அனுமதிக்க இயலும்” என்றார்.

SCROLL FOR NEXT