வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா விரைவில் இந்தியாவுக்கு வருகைதர உள்ளார்.
ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து இந்திய அரசு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்ததால், ஹசீனாவின் பயணத்துக்கு இது உகந்த நேரம் அல்ல என கருதி அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், கடந்த பிப்ரவரியில் வங்கதேசம் சென்றார். அப்போது ஹசீனாவின் துணை ஊடக செயலாளர் எம்.நஸ்ருல் கூறும்போது, “வங்கதேச பிரதமர் வரும் ஏப்ரலில் இந்தியா செல்வார்” என்றார்.
இந்நிலையில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தியப் பெருங்கடல் மாநாட்டுக்கு இடையே ஹசீனா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விரைவில் இந்தியா செல்லவிருக்கிறேன் என்றார். நில எல்லையை வரையறை செய்வது உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு இரு நாடுகளும் வெற்றிகரமாக தீர்வு கண்டுள்ளன.