உலகம்

உலகின் மிகப்பெரிய செல்ஃபி: வங்கதேசத்தில் சாதனை முயற்சி

ஐஏஎன்எஸ்

வங்கதேசத்தின் தலைநகர் டாகாவில், 1,151 பேர் அடங்கிய செல்ஃபி படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. ஒரே செல்ஃபி படத்தில் இத்தனை மக்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பதால் இது உலக சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாஃப்டின் நோக்கியா லூமியா 730 என்ற ஸ்மார்ட்ஃபோனை பிரபலப்படுத்த இந்தப் படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இந்தப் செஃல்பியில் பங்கேற்க மைக்ரோசாஃப்ட் லூமியா வங்கதேசத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பதிவு செய்து கொண்டவர்களே இதில் இடம்பெற்றுள்ளனர்.

சற்றுமுன் வரை 20,000-க்கும் அதிகமான லைக்குகளை இந்தப் செல்ஃபி படம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு, ஆஸ்கர் விருது விழாவில் எடுக்கப்பட்ட செல்ஃபி படமே உலகம் முழுவதும் பிரபலமானது. மேலும் 30 லட்சத்திற்கும் அதிகமான ரீட்வீட்டுகளை பெற்றது. தற்பொது அந்த சாதனையை லூமியாவின் இந்த செல்ஃபி படம் முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இந்தச் சாதனையை கின்னஸ் அங்கீகரிக்கவில்லை.

SCROLL FOR NEXT