உலகம்

எங்கள் கடல் எல்லைக்குள் நுழையும் படகுகள் பறிமுதல் செய்யப்படும்: இலங்கை

ராமேஸ்வரம் ராஃபி

கடல் எல்லைச் சட்டங்களை மீறி, இலங்கைக் கடற்பகுதிக்குள் நுழையும் இந்திய மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்று அந்நாட்டின் கடற்தொழில் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ராஜித சேனாரத்னா கொழும்புவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்திய சிறைகளில் 191 இலங்கை மீனவர்கள் கைதிகளாக உள்ளனர். இலங்கை மீனவர்களின் 36 படகுகளை இந்திய கடற்படை கைப்பற்றியுள்ளது. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த டெல்லி வர இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அழைப்பு விடுத்துள்ளார்.

அதேபோலவே, கடல் எல்லைச் சட்டங்களை மீறி, இலங்கை கடற்பகுதிக்குள் நுழையும் இந்திய மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும். இரு நாட்டு மீனவர்களும் அனைத்துலக சட்டங்களுக்கு இணங்கி நடந்து கொள்ள வேண்டும், இலங்கை கடற்தொழில் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை விடுத்தார்.

SCROLL FOR NEXT