உலகம்

ஆப்கனில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி

பிடிஐ

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரிட்டன் தூதரகத்துக்கு சொந்தமான காரை குறிவைத்து நேற்று நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாயினர்.

இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ள தூதரக செய்தித் தொடர்பாளர், காரில் பயணம் செய்த சிலர் காயமடைந்ததாகவும், அதேநேரம் அதில் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் யாரும் பயணம் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். காபூலில் உள்ள மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி கபிர் அமிரி கூறும்போது, “மனித வெடிகுண்டு தாக்குதலில் ஆப்கனைச் சேர்ந்த 5 பேர் பலியாயினர். மேலும் குழந்தைகள் உட்பட34 பேர் காயமடைந்தனர்” என்றார். இந்தத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT