உலகம்

ஐஐஎம்-மில் படித்த 6 பேருக்கு ஆண்டு சம்பளம் ரூ.44 லட்சம்

செய்திப்பிரிவு

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) எம்பிஏ படித்த 6 பேருக்கு ரூ.44 லட்சம் சம்பளத்துடன் துபாய் நிதி நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் துனியா பைனான்ஸ் உலகின் முன்னணி மேலாண்மை கல்வி நிறுவனங்களிலிருந்து வேலைக்கு ஆள் எடுத்து வருகிறது. அந்த வகையில், அகமதாபாத் மற்றும் கோல்கத்தாவில் உள்ள ஐஐஎம் களில் படித்த 6 பேரை இந்த ஆண்டு வேலைக்கு தேர்ந் தெடுத்துள்ளது.

எம்பிஏ பட்டதாரிகளான இவர் களுக்கு வரிப்பிடித்தம் இல்லாமல் ஆண்டொன்றுக்கு தலா ரூ.44 லட்சம் அல்லது வரியுடன் சேர்த்து ரூ.66 லட்சம் சம்பளமாக கிடைக் கும். இதுதவிர இவர்களின் செயல்திறன் அடிப்படையில் ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.

ஐஐஎம் முன்னாள் மாணவர்கள் சிலர் கூட்டு சேர்ந்து துனியா நிறுவனத்தை கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கினர். இதன் நிறுவனர்களில் ஒருவரான ராஜீவ் கக்கர் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கடந்த 1987-ம் ஆண்டு அகமதாபாத் ஐஐஎம்மில் படித்த அவர் கூறியதாவது:

ஐஐஎம் வளாகங்கள் இந்தியாவின் முன்னணி மேலாண்மை கல்வி நிறுவனங்களாக விளங்குகின்றன. திறமையான மாணவர்களை உருவாக்குவதன் மூலம் சர்வதேச அளவிலும் அவை புகழ்பெற்று விளங்குகின்றன.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட துனியா நிறுவனம், திறமையான நிர்வாகம் மற்றும் தரமான சேவை காரணமாக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. உலகின் முன்னணி மேலாண்மை கல்வி நிறுவனங்களில் எம்பிஏ பயிலும் திறமையான மாணவர் களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் இது சாத்தியமாகிறது என கக்கர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT