உலகம்

மங்கோலியாவில் காந்தி சிலை திறப்பு

பிடிஐ

மங்கோலியா தலைநகர் உலான் பாட்டர் நகரில் மகாத்மா காந்தி சிலையை குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி நேற்று திறந்து வைத்தார்.

11-வது ஆசிய-ஐரோப்பிய உச்சி மாநாடு உலான்பாட்டரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற் பதற்காக சென்றுள்ள அன்சாரி, இரு நாடுகளின் கலாச்சார மற்றும் ஆன்மிக உறவின் சின்னமாக விளங்கும் பெதுப் மடாலயத்தில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலையை நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் அன்சாரி அந்த மடாலயத்தைச் சுற்றிப் பார்த்தார். புத்த மதத்தைப் பரப்புவதற்காக, முன்னாள் இந்திய தூதர் குஷாக் பகுல் ரின்போக் என்பவரால் நிறுவப்பட்ட இந்த மடத்தை, கடந்த 1999-ம் ஆண்டு இந்திய குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ண காந்தி திறந்து வைத்தார். கடந்த ஆண்டு மங்கோலியா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி இந்த மடாலயத்தைப் பார்வையிட்டார். அப்போது, போதி மரக்கன்று ஒன்றையும் மடாலயத் தலைவரிடம் பரிசாக வழங்கினார்.

SCROLL FOR NEXT