இராக் தலைநகர் பாக்தாதி லிருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பலாத். இங்குள்ள சயீத் முகமது மசூதியில் நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்.
முதல் தற்கொலைப்படைத் தீவிரவாதி மசூதியின் நுழைவாயில் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களைக் குறிவைத்து தாக்குதலைத் தொடங்கினான். அவர்கள் அருகே சென்று தன் உடலில் கட்டி வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது தீவிரவாதியும் உள்ளே நுழைந்து குண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினான். இதில் 37 பேர் உயிரிழந்தனர். 62 பேர் காயமடைந்துள்ளனர்.