இந்தியாவிலிருந்து பலாலிக்கும் திரிகோணமலைக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்குவது என வடக்கு மாகாண கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இதை ராஜபக்சே அரசு நிராகரித்தது. இது தொடர்பாக இலங்கை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரியங்கரா ஜெயரத்ன கூறியதாவது:
வடக்கு மாகாண கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானம் நகைப்புக்குரியது. விமானப் போக்குவரத்து விவகாரங்களில் தலையிட மாகாண அரசுகளுக்கு அதிகாரம் இல்லை.
இலங்கையில் 2 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. புதிதாக சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கவேண்டும் என்றால் அதற்கு இலங்கை அரசுதான் அனுமதி வழங்கவேண்டும் என்றார் ஜெயரத்ன.
வடக்கு மாகாண கவுன்சில் தீர்மானம்
இந்தியாவிலிருந்து திரிகோண மலைக்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலிக்குக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையிலான வடக்கு மாகாண கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறு தினமே அதை நிராகரித்தது இலங்கை அரசு. இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய கவுன்சில் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவை தொடங்கப்பட்டால் பொருளாதாரம் மேம்பட வழி பிறக்கும் என்று தெரிவித்திருந்தார்.