அமெரிக்க பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பேர் மீது பாஸ்டன் நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் சந்தீப் ஷா. இவர் பங்குச் சந்தை மேம்பாட்டாளராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஷைலேஷ் ஷா. இவர் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.அவர்கள் இருவரும் குறிப்பிட்ட நிறுவனங்களின் முதலீட்டு விவரங்கள் குறித்த ரகசிய தகவல்களை வெளி நபர்களுக்கு அளித்து ஆதாயம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் கள் உள்பட மொத்தம் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட் டால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண் டனை விதிக்கப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்