உலகம்

வர்த்தக மோசடியில் ஈடுபடும் சீனா அடையாளப்படுத்தப்படும்: டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை

பிடிஐ

நான் அமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டால் நாணய மோசடியில் ஈடுபடும் சீனா அடையாளப்படுத்தப்படும்.

மேலும் தொடர்ந்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சீனா நிறுத்தி கொள்ளாவிட்டால் அந்த நாடு எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகள் குறித்து டிரம்ப் கூறும்போது, "அறிவுசார் காப்புரிமை திட்டத்தில் புதிய விதிகளை செயல்படுத்துவதன் மூலம் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். சீனா தொடர்ந்து வர்த்தக மோசடியில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இனியும் சீனா சட்ட வீரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்தி கொள்ளவிட்டால் அதற்கான எதிர்வினைகளையும் சந்திக்கும். இனி பொருளாதாரத்தில் நாம் விளையாட போகும் விளையாட்டுக்கு எந்தவித துப்பும் கொடுக்க கூடாது.

ஹிலாரி மற்றும் அவரது பொருளாதார ஆலோசகர்களின் தவறான பொருளாதார கொள்கைகளால்தான் சீனா உலக வர்த்தகத்தில் ஈடுபட முடிந்தது.

அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பொருளாதாரம் சிறப்பாக செயல்பட அனைத்து திட்டங்களும் எங்கள் பொருளாதார குழுவிடம் உள்ளது. நாங்கள் எங்களது இலக்கை அடைவோம்.

எங்களது திட்டங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் காந்தமாக அமெரிக்காவை மாற்றும்" என்றார்.

SCROLL FOR NEXT