உலகம்

“கிளாடியேட்டர்” பயிற்சி பள்ளி கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

பண்டைய ரோம் சாம்ராஜ்ஜியத்தின் போர் பயிற்சி பள்ளி ஒன்று ஆஸ்திரியாவில் புதைவுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரோம் சாம்ராஜ்ஜியத்தில் பொதுமக்கள் கூடியிருக்கும் அரங்கு களின் மத்தியில் அடிமைகள் ஒருவருடன் ஒருவர் மோதி உயிரை விடுவதும், அடிமைகள் விலங்குகளுடன் மோதுவதுமான கொடூரமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. இதனை மையமாக வைத்து “கிளாடியேட்டர்” திரைப்படமும் வெளியாகியுள்ளது.

வியன்னா நகரில் இருந்து கிழக்கே 20 கி.மீ. தொலைவில் துனுபி ஆற்றங்கரையோரம், கிளாடியேட்டர் பயிற்சி பள்ளியின் சிதிலமடைந்த கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைத்து இருந்தன. இதனை தொல்பொருள் ஆய்வாளர் கள் தோண்டி வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

SCROLL FOR NEXT