உலகம்

அல்காய்தா தீவிரவாதி அல்-லிபியை கைது செய்தது சரியான நடவடிக்கைதான்

செய்திப்பிரிவு

அல்காய்தா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபு அனஸ் அல்-லிபியை (49) லிபியாவில் கைது செய்தது சரியான நடவடிக்கைதான் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

கென்யாவிலும், தான்சானியா விலும் உள்ள அமெரிக்க தூதரகங்க ளில் 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக அபு அனஸ் மீது குற்றச்சாட்டு உள்ளது. இவரை பிடித்து தருபவர்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 30 கோடியே 96 லட்சம்) பரிசுத்தொகை அளிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் கடற்படையை சேர்ந்த அதிரடிப் படையினர், கடந்த சனிக்கிழமை லிபியா தலைநகர் திரிபோலியில் புகுந்து தொழுகைக்காக மசூதி க்குச் சென்று கொண்டிருந்த அபு அனஸை கைது செய்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த சிறப்பு அதிரடிப்படை தனது நாட்டுக்குள் புகுந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது, லிபியாவில் உள்ள இடைக்கால அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு தான் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றும், நடைபெற்றது தாக்குதல் அல்ல, கடத்தல் என்றும் லிபியா அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ள அமெரிக்க வெளியு றவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, லிபியாவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து கூறியதாவது:

அல் காய்தாவைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவ ரான அபு அனஸ் அல்-லிபி அமெரிக்காவால் சட்டப்பூர்வமாக தேடப்படும் நபர் ஆவார். அவர் மீது அமெரிக்க நீதிமன்ற த்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட த்தை அமல்படுத்தவும் பாது காப்பை பலப்படுத்தவும் தேவை ப்படும் அனைத்து நடவடிக்கைகளை யும் உரிய வழிமுறைகளின்படி மேற்கொள்ள உறுதிபூண்டு ள்ளோம்” என்றார்.

இந்த தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, முறைப்படி லிபியா அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டதா என்று கேட்டபோது, அதற்கு ஜான் கெர்ரி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

“வெளிநாட்டு அரசுடன் மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் குறித்து எதுவும் பேச இயலாது” என்று கெர்ரி கூறினார்.

போர்க்கப்பலில் விசாரணை

அபு அனஸ் அல்-லிபியை கைது செய்த அமெரிக்க கடற்படை வீரர்கள், அவரை அப்பகுதியில் உள்ள போர்க்கப்பல் ஒன்றில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

15 ஆண்டுகளாக அபு அனஸ் அல்-லிபியை அமெரிக்கா தேடி வந்தது. அவரின் உண்மையான பெயர் நாஸி அப்துல் ஹமேத் அல்-ராகி ஆகும். அவரை கைது செய்ய அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு எஃப்.பி.ஐ., சி.ஐ.ஏ. ஆகிய புலனாய்வு அமைப்பினர் உதவினர்.

விரைவில் நியூயார்க் நீதிமன்றத்தில் அபு அனஸ் அல்-லிபி ஆஜர்படுத்தப்படுவார் என அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT