இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து, இந்தியப் பெருங் கடலில் நிலவும் வெப்ப அலைகளின் தாக்கம் மற்றும் அதன் விளைவுகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளன. இப்பணியில் நவீன உணர்விக ளுடன் (சென்சார்) கூடிய புதிய ரோபோ ஈடுபடுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி அமைப்பின் (சிஎஸ்ஐஆர்ஓ கடல்புற உயிரி ரசாயன பிரிவு தலைவர் நிக் ஹார்ட்மேன் மவுன்ட்போர்டு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடலின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் இந்த ரோபோவில் உள்ள 3,600 உணர்விகள், கடலின் வெப்பநிலை மற்றும் அதன் உப்புத் தன்மை குறித்த தகவல்களை தரும்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுற்றுச்சூழலில் பெரிய அளவில் ஏற்படும் வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றத்தைக் கண்டறியும் பணியில் அர்கோ புளோட் தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோ ஏற்கெனவே ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வெற்றிகர மாக செயல்பட்டு வரும் இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமான 'பயோ அர்கோ' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ரோபோ இந்த ஆண்டு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடல் நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜன், நைட்ரேட், குளோரோபில், கரிமம், துகள்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிவதற்கான கூடுதல் உணர் விகளைக் கொண்டதாக இந்த பயோ அர்கோ இருக்கும்.
சிஎஸ்ஐஆர்ஓ தலைமையில் சோதனை அடிப்படையில் அறி முகம் செய்யப்பட உள்ள இந்த திட்டம் இந்திய தேசிய கடலியல் நிறுவனம் (என்ஐஓ) மற்றும் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் ஆகியவற்றுடன் இணைந்த செயல்படுத்தப்படும். இதன் மூலம், இந்திய கடல் பகுதியின் காலநிலை மற்றும் சுற்றுசூழலைப் பற்றிய துல்லியமான தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
இந்தியக் கடல் பகுதியிலா வெப்ப அலைகள் காரணமாக பவழப் பாறைகள் மற்றும் மீன் வளம் ஆகியவை அழிந்து வருகின்றன. இதற்கான காரணத்தை அறியவும் இநத்ப் பிரச்சினையைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறியவும் இந்த ஆய்வு உதவும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிஎஸ்ஐஆர்-என்ஐஓ இயக்குநர் வாஜி நக்வி கூறுகையில், "இந்திய கடல் பகுதியின் உயிரி புவிவேதியியல் குறித்து தெரிந்துகொள்வதற்கு இந்த திட்டம் உதவும். மேலும் மனித நடவடிக்கைகளால் அவற்றுக்கு ஏற்படும் தாக்கத்தை அறியவும் இது உதவும்" என்றார்.
ஆஸ்திரேலிய-இந்திய ஆராய்ச்சி நிதியின் கீழ் ஆஸ்திரேலிய அரசு இந்த திட்டத்துக்கான ரூ.6.3 கோடியை வழங்கி உள்ளது. இந்திய கடல் பகுதியில் தாதுப் பொருள்களும் மீன் வளமும் அதிக அளவில் உள்ளதால் இந்த ஆராய்ச்சிக்கு இரு நாடுகளும் முக்கியத்துவம் அளித்துள்ளன.