உலகம்

பாகிஸ்தானில் மசூதி அருகே வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதவிட்டு தாக்குதல் - 21 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்​தானில், மசூதி அருகே வெடிகுண்டு நிரப்பிய வாக​னத்தை மோத​விட்டு நடத்​தப்​பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் உயி​ரிழந்​தனர்.

பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தின் கோஹட் மாவட்​டத்​தில் காவல் துறை​யினரின் குடி​யிருப்​புப் பகுதி அமைந்​துள்​ளது. இந்த குடி​யிருப்பு வளாகத்​தில் அமைந்​துள்ள மசூ​தி​யின் அருகே நேற்று பிற்​பகல் வெடிகுண்டு தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

மசூ​தி​யின் அருகே வெடிகுண்​டு​கள் நிரப்​பப்​பட்ட வாக​னத்தை மர்ம ஆசாமிகள் மோத​விட்டு பயங்கர தாக்​குதலை நடத்தியுள்ளனர். நேற்று வெள்​ளிக்​கிழமை என்​ப​தால் மசூ​தி​யில் சிறப்​புத் தொழுகை நடை​பெற்​றது.

தொழுகை​யின்​போது நடத்​தப்​பட்ட இந்த பயங்​கரத் தாக்​குதலில் 21 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும், 50 பேர் படு​கா​யங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரியவந்துள்ளது. இவர்​களில் பலர் கவலைக்​கிட​மாக இருப்பதால் உயி​ரிழப்பு அதி​கரிக்​கும் என்று அஞ்​சப்​படு​கிறது.

இந்​தத் தாக்​குதலால், மசூதி அருகே பெரும் பள்​ளம் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், கூடு​தலாக பாது​காப்​புப் படை​யினர் அங்கு குவிக்கப்பட்டு தீவிர கண்​காணிப்​புப் பணி​கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்​றன. அந்​தப் பகு​தி​யில் ராணுவத்தினர் தீவிர கண்​காணிப்​புப் பணி​களில் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்​தானிய ஊடகங்​களில் செய்தி​கள் வெளிவந்​துள்​ளன.

இந்​தத் தாக்​குதலுக்கு இது​வரை எந்​தவொரு தீவிர​வாத அமைப்​பும் பெறுப்​பேற்​க​வில்​லை. மேலும், சமீப​கால​மாக பாகிஸ்​தான் பாதுகாப்​புப் படை​யினருக்கு எதி​ரான தீவிர​வாதத் தாக்​குதல்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. கடந்த ஆகஸ்ட் மாதத்​தில் மட்​டும் பாகிஸ்​தானின் பல்​வேறு இடங்​களில் நடத்​தப்பட்ட 199 தீவிர​வாதத் தாக்குதல்களில் 158 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்​ என்​பது குறிப்பிடத்தக் கது.

SCROLL FOR NEXT