இலங்கையில் போர் காரணமாக புலம் பெயர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடுத்த ஆண்டு மத்தி யில் அவரவர்களுக்குச் சொந்த மான பகுதியில் மறுகுடியமர்த்தப் படுவார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு முதன்முறையாக ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி-மூன் சமீபத்தில் அங்கு சென்றிருந்தார். அப்போது, போரினால் பாதிக்கப் பட்ட தமிழர் பகுதிகளில் நல்லிணக்க நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு மூன் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படை தளபதி மகேஷ் சேனநாயகே கூறும்போது, “யாழ்ப் பாணத்தில் உள்ள 71 முகாம்களில் 971 குடும்பங்களைச் சேர்ந்த 3,388 பேர் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் அவரவர்களுக்குச் சொந்தமான பகுதியில் மறுகுடி யமர்த்தப்படுவர்” என்றார்.
கடந்த 2009-ல் நடந்த இறுதிக் கட்ட போரின்போது சுமார் 30 ஆயிரம் பேர் தங்கள் வசிப்பிடங் களிலிருந்து வெளியேறினர். இவர் கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்ட னர். இவர்களை மீண்டும் அவரவர் பகுதியில் மறுகுடியமர்த்த வேண்டும் என்று சர்வதேச சமுதாயம் வலியுறுத்தி வருகிறது. இதனால், அரசு மறுகுடியமர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் ராணுவ வசம் உள்ள நிலங்களை விடு விக்க கோரி அப்பகுதி மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நேற்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியபோது, 10 ஏக்கர் நிலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நிலங்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போலீஸில் தமிழர்கள்
இலங்கை பாதுகாப்புப் படை பிரிவுகளில் தமிழர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அளித்த பதில் வருமாறு:
ஆரம்ப காலத்தில் பாது காப்புப் படையிலும் போலீஸ் படையிலும் தமிழர்கள் அதிகம் இடம்பெற்றிருந்தனர். உள்நாட்டுப் போர் காரணமாக பாதுகாப்புப் படைகளில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்தது.
இலங்கையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு போலீஸ் படையில் 2000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் போலீஸ் படை, பாதுகாப்புப் படை, சிறைச்சாலை காவலர் பணிகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.