உலகம்

தீவிரவாத முகாம்களை தகர்த்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரணப் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

பாகிஸ்தான், தன் சொந்த மண்ணில் இருந்து சுதந்திரமாக செயல்படும் தீவிரவாத முகாம்களை தகர்த்தால் மட்டுமே இந்தியாவுடன் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு ஏற்படும் என ஜனாதிபதி பிரணப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

துருக்கி நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான பெரும்பாலான பயங்கரவாத செயல்கள், பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஏவி விடப்படுகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும். தீவிரவாத முகாம்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும். இதனை செயல்படுத்தாமல் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை. இவ்வாறு பிரணப் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT