உலகம்

அகதிகள் விவகாரம்: ஆஸ்திரேலிய பிரதமரிடம் கோபமாக பேசிய ட்ரம்ப்

செய்திப்பிரிவு

வாஷிங்டன் அகதிகள் விவகாரத்தில் ஆஸ்திரே லிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லிடம் தொலைபேசியில் கோபமாக பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இணைப்பை பாதியிலேயே துண்டித்தார்.

உள்நாட்டுப் போர் நடைபெறும் சிரியா, ஈரான், லிபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக பலர் ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை அந்த நாட்டு அரசு ஏற்க மறுத்து வருகிறது. தற்காலிகமாக சுமார் 1250 அகதிகள், மனுஸ் நவுரா தீவுகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலி யாவுக்கும் மிக நெருங்கிய உறவு உள்ளது. அதன் அடிப்படையில் கடந்த ஒபாமா ஆட்சியின்போது ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந் துள்ள 1250 அகதிகளுக்கு அமெரிக்காவிடம் அடைக்கலம் அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்பும் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லும் தொலைபேசியில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரம் இரு தலைவர்களும் தொலைபேசியில் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது அகதிகள் விவகாரத்தால் 25 நிமிடங்களிலேயே தொலைபேசி இணைப்பை ட்ரம்ப் துண்டித்தார்.

இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஒபாமா ஆட்சியின்போது ஆஸ்திரேலியாவுடன் மேற்கொள் ளப்பட்ட ஒப்பந்தம் மிகவும் மட்டமானது, தீவிரவாதிகளை அமெரிக்காவுக்கு அனுப்ப ஆஸ்திரேலியா திட்டமிடுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் அமெரிக்கா, ஆஸ்திரேலிய இடையே விரிசல் ஏற்படக்கூடும் என்று சர்வதேச நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT