நாட்டின் மிக மிக முக்கியப் பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் ரூ.3,600 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில், இத்தாலி நாட்டு இடைத்தரகர் கிடோ ரால்ஃப் ஹாஸ்கே, ஸ்விட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘லா ரிபப்ளிக்கா’ என்ற இத்தாலிய இணையதளத்தில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிடோ ரால்ஃப் ஹாஸ்கே, அடுத்த வாரம் இத்தாலிக்கு அழைத்து வரப்படுவார் என தெரிகிறது.