திட்டமிட்டபடி மொரீஷியஸில் 2015ல் நடக்கவேண்டிய காமன்வெல்த் மாநாடு அங்கு நடைபெறாது. இலங்கையில் நடைபெறும் மாநாட்டை புறக்கணித்ததே இதற்கு காரணம் என்றார் மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம்.
பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக ராம்கூலம் கூறியதாவது: 2015ல் நடைபெறும் அடுத்த காமன்வெல்த் மாநாட்டை மொரீஷியஸ் நடத்த முடியாததற்கு காரணம் இலங்கையில் நடைபெறும் மாநாட்டை புறக்கணித்ததுதான்.
அடுத்த மாநாட்டை நடத்த விரும்பும் ஒரு நாட்டின் தலைவர் மாநாடு நடக்கும் நாட்டில் இருக்க வேண்டும் என்பது மரபு. அந்த மரபை மீற விரும்பாததால் வேறு யாராவது அடுத்த மாநாட்டை நடத்தட்டும் என எமது வெளியுறவு அமைச்சரிடம் தெரிவித்துவிட்டேன் என்றார் ராம்கூலம்.