உலகம்

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வருகையை எதிர்த்து பாகிஸ்தானில் பேரணி

பிடிஐ

சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வருகையை எதிர்த்து பாகிஸ்தானில் பேரணி நடைபெற்றது.

பாகிஸ்தானை சேர்ந்த காஷ்மீர் பிரிவினை ஆதரவாளர்களும், ஜிகாத் அமைப்பினர், அரசியல் கட்சிகள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களின் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் இன்று (புதன் கிழமை) இஸ்லமாபாத், லாங்கூர் நகரங்களில் காஷ்மீரில் நிலவும் அமைதியின்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்றனர்.

பேரணியில் சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்க வரும் ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் “காஷ்மீரிகளுக்காக தாங்கள் அனுப்பும் நிவாரண பொருட்களை இந்தியா பெற்று கொள்ள வேண்டும். காஷ்மீரிகளுக்கு உதவ மருத்துவ குழுக்கள் தயராக உள்ளது. இந்தியா நிவாரண பொருட்களை பெறும் வரை இங்கிருந்து நகர மாட்டோம்” என்று ஒன்றிணைக்கப்பட்ட ஜிகாத் அமைப்பின் தலைவர் சையத் சாஹுதீன் கூறினார்.

SCROLL FOR NEXT