உலகம்

இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது

ஏஎஃப்பி

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா-பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள ஒரு பெல்ட் ஒரு ரோடு புதிய வாணிபத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனாவை சென்றடைந்தது.

வடமேற்கு சீனாவின் கரமெய் பகுதிக்கு பாகிஸ்தானிலிருந்து கடல் உணவு வந்திறங்கியது. பாகிஸ்தானில் உள்ள கவாதார் துறைமுகத்திலிருந்து இந்த கடல் உணவு சீனாவுக்கு 34 மணி நேரத்தில் வந்ததையடுத்து கரமேய் பகுதி மக்கள் பாகிஸ்தான் கடல் உணவை ருசித்ததாக சீன பத்திரிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

16 வகையான ஆழ்கடல் கடலுணவு சீனாவுக்கு வந்திறங்கியது. இதற்காக கவாதார் துறைமுகத்தில் சீனா நிறுவனம் ஒன்றைத் தொடங்கியது. இது பாகிஸ்தானில் வர்த்தக உரிமம் பெற்ற முதல் சீன நிறுவனமாகும்.

இதற்காக சீனா 510 மில்லியன் யுவான் முதலீட்டில் கடல் உணவு பாதுகாப்பு கிட்டங்கி, உணவு பதனிடுதல் வசதி, ஐஸ் தொழிற்சாலை, கடல் நீர் உப்பு அழிப்பு தொழிற்சாலை, கடல் ஆய்வு மையம் போன்றவற்றை உருவாக்குகிறது.

சீனாவுடன் ஒத்துழைப்பு மேற்கொண்ட இத்திட்டங்களினால் பாகிஸ்தான் ஆண்டொன்றுக்கு 6-8 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டவுள்ளது.

SCROLL FOR NEXT