உலகம் முழுவதும் 30 கோடிக்கும் மேற்பட்டோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள் ளது.
உலக சுகாதார தினம் வரும் 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஐ.நா.சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார அமைப்பு மன அழுத்தம் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 18 சதவீதத்துக்கு மேல் அதிகரித் துள்ளது. இன்றைய காலகட்டத் தில் உலகம் முழுவதும் 30 கோடிக் கும் மேற்பட்டோர் மன அழுத் தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இது உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை ஆகும். குறிப்பாக, இது தற்கொலைக்கு காரணமாக அமைகிறது. எனவே, மனநல சுகாதாரத்தை பேணிக் காப்பது பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். மேலும் இதுபோன்ற பிரச்சினையை உடனுக்குடன் தீர்க்க வேண்டிய தும் அவசியம் என்பதை இந்த தகவல் உணர்த்துகிறது.
பொதுவாக மனநல சுகாதாரத் துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பணக்கார நாடுகளில்கூட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை. மேலும் அரசுகளும் மனநல சுகாதாரத்துக்கு குறைவான நிதியே ஒதுக்குகின்றன. இந்த நிலை மாற வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.