உலகம்

டைம் இதழின் ஆண்டின் சிறந்த மனிதர் போப் பிரான்சிஸ்

செய்திப்பிரிவு

2013-ம் ஆண்டின் சிறந்த மனிதராக, போப் பிரான்சிஸை 'டைம்' இதழ் தேர்வு செய்துள்ளது. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராகி ஒன்பது மாதங்களே ஆன நிலையில், போப் பிரான்சிஸுக்கு இந்தச் சிறப்பு கிடைத்துள்ளது. மனசாட்சியின் புதிய குரலாக உருவெடுத்துள்ளதாக போப் பிரான்சிஸுக்குப் புகழாரம் சூட்டியுள்ள டைம் இதழ், மிகவும் குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் இந்த அளவுக்கு விரைவாக கவனத்தை ஈர்ப்பது மிகவும் அபூர்வமானது என்று குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கப் பகுதியியில் இருந்து தேர்தெடுக்கப்படும் முதலாவது போப் என்ற சிறப்பைப் பெற்ற போப் பிரான்சிஸ், சர்வதேச அளவில் வறுமை, உலகமயமாதல் உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் மீதான விவாதங்களில் தன்னை ஈடுபடுத்தி வருபவர். டைம் இதழின் ஆண்டின் சிறந்த மனிதருக்கான தெரிவிப் பட்டியலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உள்பட உலகத் தலைவர் 42 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT