உலகம்

இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து சர்வதேச விசாரணை அவசியம்: ஐ.நா. மனித உரிமை ஆணையர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் ஜெய்ட் ராட் அல் உசேன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது 40 ஆயிரத்துக்கும் மேற் பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப் பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளது. இதை ஏற்க மறுக்கும் இலங்கை அரசு, உள் நாட்டு நீதிபதிகள், புலனாய்வு அதிகாரிகள் அடங்கிய குழுவே விசாரணை நடத்தும் என்று கூறி வருகிறது.

தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் ஜெனீவா வில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதையொட்டி மனித உரிமை ஆணையர் ஜெய்ட் ராட் அல் உசேன் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை போர்க்குற்ற விசா ரணையில் நடுநிலைத் தன்மையை உறுதி செய்ய சர்வதேச நீதிபதி கள், வழக்கறிஞர்கள், புலனாய்வு அதிகாரிகள் பங்கேற் பது அவசியம். இலங்கையில் இன்ன மும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீடிக்கிறது. இது தமிழர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

இலங்கையின் வடகிழக்கில் ராணுவ வசமுள்ள நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் செய்வது கவலை யளிக்கிறது. தமிழர் பகுதிகளில் இன்னமும் ராணுவத்தின் தலை யீடு உள்ளது. சுற்றுலா, விவசாயம், வர்த்தகத்தில்கூட ராணுவத்தின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் இறுதிக்கட்ட போரின் போது கொத்து குண்டுகள் வீசப் பட்டதாகவும் தகவல்கள் வெளி யாகி உள்ளன. இதுகுறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்தப் பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT