உலகம்

சவூதியில் இந்தியருக்கு மரண தண்டனை

செய்திப்பிரிவு

சவூதி அரேபியாவில் தன்னை வேலைக்கு அழைத்துச் சென்ற ஏஜென்டை கொலை செய்த வழக்கில் இந்தியர் ஒரு வரின் தலையை துண்டித்து வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து அந்நாட்டு உள் துறை அமைச்சகம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் "கருத்து வேறுபாடு காரணமாக இந்தியரான முகமது லத்தீப் தனது இரும்புக் கம்பியால் தாக்கியதில் ஏஜென்ட் தபில் அல்-தொசாரி இறந்துள்ளார். பின்னர் அவரது உடலை ஒரு கிணற்றில் போட்டு விட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், லத்தீப் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ததுடன் அவருக்கு மரண தண்டனை விதித்தது" என கூறப்பட்டுள்ளது.

சவூதியில் பலாத்காரம், கொலை, மதத்தை இழிவுபடுத் துதல், ஆயுத கொள்ளை மற்றும் போதை மருந்து கடத்தல் ஆகியவற்றுக்கு ஷரியா சட்டப்படி மரண தண்டனை வழங்கப் படுகிறது. இந்த ஆண்டில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT