உலகம்

7 நாட்களில் ரத்த நாளங்களை வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை

பிடிஐ

இரண்டு தேக்கரண்டி ரத்தத்தைக் கொண்டு 7 நாட்களில் ரத்தநாளம் வளரச் செய்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.

இரைப்பை உணவுக்குழாயிலிருந்து கல்லீரலுக்குச் செல்லும் ரத்த நாளம் ஒரு சிறுவனுக்கு வளர்ச்சியடையாமல் இருந்தது. அவனுக்கு ரத்தநாளத்தை வளர்க்க மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றுள்ளது. ஸ்வீடன், கோதன்பெர்க் பல்கலைக்கழகத்திலுள்ள சல்கி ரேன்ஸ்கா அகாடமி பேராசிரியர் மைக் கேல் ஓலாவ்ஸன் தலைமையிலான விஞ்ஞானிகள் இச்சாதனையைச் செய்துள்ளனர். இக்குழுவில், சுசித்ரா சுமித்ரன் என்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானியும் இடம் பெற்றுள்ளார்.

“நோயாளியின் ஸ்டெம்செல்களைப் பயன்படுத்தி, புதிய ரத்த நாளத்தை வளரச் செய்து இரு உறுப்புகளையும் முறையாக இணைந்து செயல்பட வைத்துள்ளோம்” என விஞ்ஞானி மைக்கேல் ஓலாவ்ஸன் தெரிவித்துள்ளார். “எலும்பு மஜ்ஜையைத் துளையிட்டு ஸ்டெம்செல்களை எடுப்பதற்கு மாற்றாக புதிய முறை கையாளப்பட்டுள்ளது. இம்முறையில் 25 மில்லி (சுமார் இரு தேக்கரண்டிகள்) ரத்தம் தேவையான ஸ்டெம்செல்களைப் பெறுவதற்கு போதுமானதாக இருந்தது. மேலும், புதிய ரத்த நாளம் வளர்வதற்கு அந்த ரத்தம் வெகுவாக ஊக்குவித்தது. அனைத்து நடைமுறைகளும் ஒரே வாரத்தில் நிறைவு பெற்றன” என சுசித்ரா சுமித்ரன் தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT