ஆஸ்திரேலியாவின் மோர்வெல் நகர மக்களை ஊரை விட்டு வெளியேறிவிடுமாறு அந்நாட்டு அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.
அந்நகரம் அருகே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள தீயால், அப்பகுதி முழுவதுமே புகை சூழ்ந் துள்ளது. இதனால் பெரும்பாலான மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நகரில் உள்ள சுமார் 14 ஆயிரம் பேரும் அங்கிருந்து வெளியேற அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. மெல்போர்ன் நகரின் கிழக்கே லாட்ரோபி வேலி பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு மேலும் கூறியிருப்பதாவது:
சுரங்கத்தில் பற்றியுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள். அப்பகுதியில் இன்னும் 10 நாள்களுக்கு புகை மூட்டம் நீடிக்கும் என்று தெரிகிறது. சுகாதாரத்துறை யினர் மோர்வெல் நகர மக்களின் உடல் நிலையை பரிசோதித்தனர். இதில் பலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இப்பகுதி யில் இருந்து புகையால் மாசடைந்த காற்றை சுவாசித் தால் அவர்களது உடல்நிலை எதிர்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டது.
வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண் களுக்கு புகையால் பாதிப்பு அதிகம் இருக்கும். எனவே இப்போதைய சூழ்நிலையில் சிறிது காலத்துக்கு நகர மக்கள் அங்கிருந்து வெளியேறிவிடுவது நல்லது என்று அரசு முடிவெடுத்துள்ளது. இதன் அடிப்படையிலேயே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் ஆலோசனையை அடுத்து மக்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.