சவுதியில் தடையை மீறி கார் ஓட்டியதாக பெண் செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதியைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் லோஜைன் அல் ஹத்லோல் (27) சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட தடை செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து போரட்டம் நடத்தி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு வாகனம் ஓட்டியதாக லோஜைன் கைது செய்யப்பட்டிருகிறார்.
இந்த நிலையில் ஜுன் 4-ம் தேதி சவுதி சர்வதேச விமான நிலையத்தில் லோஜனை போலீஸார் கைது செய்ததாக மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி தெரிவித்துள்ளது.
லோஜைன் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. எனினும் லோஜைன் தடையை மீறி வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுதியில் பெண்களுக்கு எதிரான பலவிதமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அதில் முக்கியமானது, வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையாகும். உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத வகையில், சவுதியில் மட்டுமே பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்தும், போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியும் வருவது குறிப்பிடத்தக்கது