உலகம்

மிரட்டி திருமணம் செய்த பாக். இளைஞர்: தூதரகத்தில் இந்திய பெண் தஞ்சம்

செய்திப்பிரிவு

புதுடெல்லியைச் சேர்ந்தவர் உஸ்மா (20). இவர் மலேசியாவுக்கு சென்றிருந்தபோது பாகிஸ் தானைச் சேர்ந்த தாஹிர் அலி என்பவரை சந்தித்தார். அவர்களின் நட்பு காதலாக மலர்ந்தது.

கடந்த மே 1-ம் தேதி உஸ்மா, வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றார். அங்கு சென்ற பிறகுதான் தாஹிர் அலி ஏற்கெனவே திருமணமானவர் என்பதும் அவருக்கு 4 குழந்தை கள் இருப்பதும் தெரியவந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உஸ்மா உடனடியாக இந்தியா திரும்ப முயற்சி செய் தார். ஆனால் தாஹிர் அலியும் அவரது குடும்பத்தினரும் துப்பாக்கியை காட்டி மிரட்டி, உஸ்மாவை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர். கடந்த 3-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்குச் சென்ற உஸ்மா, தன்னை மிரட்டி திருமணம் செய்த தாஹிர் அலி பல்வேறு வகைகளில் கொடுமைப் படுத்துவதாக புகார் அளித்தார்.

இதனிடையே தாஹிர் அலி உள்ளூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மனைவியை இந்திய தூதரகம் சிறைபிடித்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை மறுத் துள்ள இந்திய தூதரகம், உஸ்மாவுக்கு தேவையான சட்ட உதவிகளை தூதரகம் மேற்கொள் ளும் என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT