உலகம்

உகாண்டா அழகியாக பட்டம் வென்றார் முன்னாள் விவசாயி

ஏஎஃப்பி

கோழிப்பண்ணை மற்றும் காளான் வளர்ப்பில் ஈடுபட்ட விவசாயப் பெண் உகாண்டா அழகியாகத் தேர்வாகியுள்ளார். அவர் மூலம் உகாண்டாவில் வேளாண்மையை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உகாண்டா அழகிப்போட்டி 2014-ன் இறுதிச் சுற்றில் 20 பேர் பங்கேற்றனர். அவர்களில் லியா கலாங்குகா (23) உகாண்டா அழகி யாக முடிசூடினார்.

கம்பாலாவில் உள்ள மகெரேரெ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர் கலாங்குகா. உகாண்டா அழகியாக முடிசூட்டப்பட்டதில் பெருமகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “விவசாயம் அழகான விசயம். அதனை இளைய தலைமுறை விரும்பும். தற்போது பெரும்பாலும் மூத்த பெண்களே விவசா யத்தில் ஈடுபடுகின்றனர். வேளாண் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் முதுகெலும்பு போன்ற வேளாண் மையை ஊக்கப் படுத்தும் பணியில் நான் பெருமகிழ்ச்சியடைவேன்” என்றார்.

வழக்கமான அழகிப் போட்டி களைப் போலன்றி, இம்முறை ‘இளைஞர்களிடம் வேளாண் தொழில்முனைவை ஊக்கப்படுத் துதல்’ என்ற மையக் கருவில் அழகிப் போட்டி நடத்த, போட்டி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர். வேளாண்மையில் ஈடுபாடு டைய உகாண்டா ராணுவம் இப் போட்டியை இணைந்து நடத்தியது.

மேடையில், வேளாண்மை சார்ந்த கேள்விகளுடன், போட்டியா ளர்கள் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் சார்ந்தும் செயல்பட வேண்டியிருந்தது.

போட்டி ஏற்பாட்டாளர் ஜோரம் முஸிரா கூறும்போது, “பாரம் பரியமான அழகிப்போட்டியி லிருந்து மிகவும் வித்தியாசமான அழகிப் போட்டியை நடத்தியிருக் கிறோம். போட்டியில் பங்கேற்ற பெண்கள் வாழ்க்கையை மாற்றி யமைக்கும் ஏராளமான அனுபவங் களைக் கற்றுக் கொண்டனர். அவர்கள் வெளியில் சென்று வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கற்றுக் கொண்டுள்ளனர்” என்றார்.

ரேடியோ நிகழ்ச்சித் தொகுப் பாளரும், போட்டி இணை ஏற்பாட் டாளருமான ரோஜர் முகிஸா கூறும்போது, “அழகை அர்த்தத் துடன் ஆராதித்து, வேலை வாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருக்கிறோம். உகாண்டா அழகி, உகாண்டாவின் மரபுகளை பிரநிதித்துவம் செய்வார். வேளாண்மைதான் உகாண்டாவின் மரபு. அதற்கு மரியாதை செய்வோம்” என்றார்.

‘இறுதிச் சுற்றுக்குத் தேர்வான அழகிகள் உருளைக்கிழங்கு மாவு, மாம்பழச் சாறு, மக்காச்சோள உணவு, தேன் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவர்’ என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT